செந்துறை அருகே தோஷம் நீக்குவதாகக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பு

செந்துறை அருகே தோஷம் நீக்குவதாகக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பு
X
செந்துறை அருகே தோஷம் நீக்குவதாகக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகைப் பறித்துச் சென்ற பாம்பாட்டியை தேடி விசாரித்து வருகின்றனர்.
அரியலூர், பிப். 24- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே, பெண்ணிடம் தோஷம் நீக்குவதாகக் கூறி அவர் அணிந்திருந்த  தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்ற பாம்பாட்டி நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். செந்துறை அருகேயுள்ள வஞ்சினாபுரம் காலனித் தெருவில் திங்கள்கிழமை வந்திருந்த மர்ம நபர் ஒருவர், பாம்பை வைத்து, வித்தை காட்டி கூட்டம் சேர்த்தது மட்டுமல்லாமல், பாம்பின் மீது உங்கள் கை நிழல் விழும் போது உங்கள் பாவம் தோஷம் நீங்கும் என கூறியுள்ளார். அவ்வாறு பொது மக்கள் நின்றுள்ளனர். பின்னர்,ஒவ்வொரு வீட்டு வந்து தோஷம் நீக்குகிறேன் என கூறி அவர், ஜெயக்கொடி என்பவர் வீட்டுக்குச் சென்று தோஷம் நீக்க 15 ஆயிரம் கேட்டுள்ளான். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர், கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுன் சங்கிலி, கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை கழட்டி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபர், தோஷம் நீக்குகிறேன் எனக் கூறி, ஜெயக்கொடி அசந்த நேரத்தில், மேற்கண்ட நகைகளை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்கொடி அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து அந்த பாம்பாட்டி நபரை தேடி வருகின்றனர்.
Next Story