இறந்த ஆட்டுடன் தர்ணா போராட்டத்தில் குதித்த விவசாயி

தனது ஆட்டை வெறி நாய்கள் கடித்ததாக விவசாயி தர்ணா போராட்டம்
பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் கிராமத்தில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. மேலும் அங்குள்ள விவசாயிகள்  வாழ்வாதாரத்திற்காக ஆடுகள், கோழிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். களியனூர் கிராமம் மற்றும் சமய சங்கிலி காவிரி கரையோரம் அடிக்கடி மேய்ச்சலில் உள்ள ஆடுகளை, வெறி நாய்கள் கடித்துக் கொல்வது அடிக்கடி நடைபெறும் சம்பவங்களாக உள்ளது . கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்துள்ள நிலையில், களியனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்ற விவசாயி திங்கட்கிழமை அன்று  தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் ஆட்டை கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் ஆடு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தொடர்ந்து இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், வெறி நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, ஆடு வெறிநாய் தாக்கப்பட்டவுடன் கால்நடை அவசர உறுதிக்கு அழைத்தபோது எவ்வித முறையான பதிலையும் ஊழியர்கள் அளிக்கவில்லை.. இதன் காரணமாக ஆடு துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது எனவும்,எனக் கூறி இறந்த ஆட்டுடன் களியனூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், விவசாயி மகேஸ்வரனை சமரசம் செய்து, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் ஆடுகள் வெறி நாய்களால் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தததை  அடுத்து விவசாயி மகேஸ்வரன் தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டார்..  இதன் காரணமாக களியனூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பரபரப்பான சூழல் காணப்பட்டது...
Next Story