ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா.

X
அரியலூர், பிப்.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, பள்ளியின் 78வது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தலைமை ஆசிரியர் தவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தாமரை, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கியநாதன், நீதி, தமிழ் ஆசிரியர் ஸ்ரீகாந்த், கவுன்சில வெற்றிவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு க.சொ.க. கண்ணன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Next Story

