நீலகிரிமாவட்டம் குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்  சங்கத்தினர் மார்க்கெட் கடைகள் இடித்து புதிதாக கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

நீலகிரிமாவட்டம் குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்  சங்கத்தினர் மார்க்கெட் கடைகள் இடித்து புதிதாக கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
X
நீலகிரிமாவட்டம் குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்  சங்கத்தினர் மார்க்கெட் கடைகள் இடித்து புதிதாக கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
நீலகிரிமாவட்டம் குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்  சங்கத்தினர் மார்க்கெட் கடைகள் இடித்து புதிதாக கட்டுவது குறித்து நகராட்சிகள் மண்டல இணை இயக்குனர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்........ நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான 800 மார்க்கெட் கடைகள் இடித்து புதிதாக கட்டும் பணிக்காக ரூபாய் 41.50கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜையும் போடப்பட்டது இந்நிலையில் மார்க்கெட் சங்கத்தினர் வியாபாரிகள் கால அவகாசம் தேவை என்றும் கடைகளை இடித்து விட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதித்து விடும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தனர் அப்பொழுது மாவட்ட ஆட்சியர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு கூறுமாறு கேட்டுக் கொண்டார் இதனைத் தொடர்ந்து இன்று நகராட்சிகள் மண்டல இணை இயக்குனர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையாளர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் சங்கத்தினரை அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர் பின்பு மனுக்கள் ஆகவும் பெறப்பட்டது இதனைத் தொடர்ந்து மண்டல இணை இயக்குனர் தாங்கள் பதிவு செய்த கருத்துக்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து பின்பு பதில் அளிப்பதாக கூறினார் இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்இந்த கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்  இதனால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story