நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்...

நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்...
X
நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்...
நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசித்துவரும் கலை செல்வி மற்றும் மணிகண்டன் தம்பதியினரின் 10 மாத ஆண்  குழந்தை ஜெஸ்வினுக்கு  தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக கடந்த நான்கு மாதமாக கூறி வந்த  நிலையில், தற்போது குழந்தை  இறந்தது தடுப்பூசி வேக்சின்  போட்டதால் தான்  என்று ஆய்வக ரிப்போர்ட் வந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தன்னுடைய மற்றொரு  குழந்தையோடு  ஆட்சியர் அலுவலகத்தில்  தரையில் அமர்ந்து கணவன் மனைவி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் கலைச்செல்வி, மணிகண்டன் தம்பதியினர் இவர்களுக்கு ஜஸ்வின் என்ற பத்து மாத குழந்தையும், ஜஸ்வந்த் என்ற நான்கு வயது குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 13 ம்தேதி கோத்தகிரி அருகேயுள்ள கட்டப்பட்டு அருகே செயல்பட்டு வரும் குடுமணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்து மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அப்போது தடுப்பூசி செலுத்திய பிறகு குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவரது தாய் மற்றும் உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு குறைவாக இருக்கிறது.உடனே மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த போது குழந்தை இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அப்போது குழந்தையின் தாய் கலைச்செல்வி தனது குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் இல்லை எனவும், தடுப்பூசி செலுத்திய பிறகு குழந்தை இறந்துள்ளதாகவும், குழந்தையின் இறப்பில் மர்மம் உள்ளதால் தங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டுமெனவும், தடுப்பூசியில் செலுத்திய மருந்தே காரணம் என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோட்ட மருத்துவர் முதன்மை அதிகாரி கூறுகையில், கோத்தகிரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை உதகைக்கு அழைத்து வரும்பொழுது குழந்தைக்கு அதிக அளவில் மூச்சுத் திணறல் இருந்தது, மருத்துவமனைக்கு கொண்டு வந்த 10 நிமிடத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின்  இறப்பிற்காக காரணம் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் என்றும், உடற்கூறு ஆய்வின்போது சிடி ஸ்கேன் ஆய்வு,மூளை பகுதியின் ஆய்வு மேற்க் கொண்டு தடுப்பு மருந்து மூலம் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதேனும் உடல் பாதிப்பு இருந்ததா எனவும் உடற்கூறு ஆய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.அதேபோல தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பின்பு தாய் பால் கொடுத்ததால் மூச்சு திணறல் ஏற்ப்பட்டதா அல்லது தடுப்பு மருந்து மூலம் மூச்சு திணறல் ஏற்ப்பட்டதா எனவும், மருந்தில் ஏதாவது தவறு உள்ளதா,குழந்தைக்கு வேறு இணைநோய் உள்ளதா அல்லது வேறு காரணமா என்ற உண்மை உடற்கூறு ஆய்விற்கு பின்னரே தெரிய வரும் என்றார். அதன் படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த நிலையில் குழந்தை இறந்ததற்கு காரணம் தடுப்பூசி வேக்சின் செலுத்தியது தான் என குறிப்பிடப்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரேத பரிசோதனை அறிக்கையை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சம்மந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே இவர்களை அழைத்து சென்று சமாதான படுத்தும் வகையில்,இது முதல் பிரேத பரிசோதனை அறிக்கை என்றும், மேலும் மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் முழு விவரம் தெரியவரும் என கூறியதாக இறந்த குழந்தையின் தாய் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சம்பவம் வேறு ஒரு குழந்தைக்கு வரக்கூடாது எனவும்,எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேட்டியளித்தார்.
Next Story