விருதுநகரில் புதிய தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

X
மொழி விவகாரம் தொடர்பாக யாராவது நீதிமன்றம் சென்றால் திமுக ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பு கூட உருவாகலாம். நேற்று பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்கள் அழித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திமுக அரசை கலைக்கக்கூடிய சூழல் கூட உருவாக்கலாம் என்றும் விருதுநகர் மாவட்டத்தில் மித மிஞ்சிய அளவிற்கு கனிமவளக் கொள்ளை நடைபெற்று *வருகிறது. ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு வருமானத்தைப் பெருக்கி வருகின்றனர். பொதுமக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. சிவகாசியில் அடிக்கடி தொடர் பட்டாசு வெடி விபத்துகளால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கான தீர்வு காணப்படாமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இருந்து வருகிறது. ஜவுளி பூங்கா வருவதாக அறிவிப்பு வெளியானது தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை என விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி பேட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசியல் குறித்த கேள்வியை தவிர்த்த கிருஷ்ணசாமி விருதுநகர் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, பூர்வீக பட்டியல் மற்றும் ஆதி திராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய உள் ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பயன்களை பெற்று வருகின்றனர். உள்ள ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார். ஆளும் திமுக அரசு தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எஸ்.சி ஆதிதிராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய தட்கோ கடன் உதவி அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்டு மிகப்பெரிய அநீதி நடந்து வருகிறது. பட்டியல் இன மற்றும் பறை இன மக்கள் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. கட்சியின் 7-வது மாநில மாநாடு டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் மலைவாழ் மக்களையும் வெளியேற்றுவது நியாயமானது அல்ல. உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்திலும் புலிகள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து பூர்விக மக்களை வெளியேற்றுவதில் தமிழக அரசு குறியாக இருக்கிறது. பட்டியல் வெளியேற்றம் என்பது எஸ் சி ஆதிராவிட மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெறுவது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஒரு மொழியை கற்க கூடாது என்ன சொல்வதற்கு மாநில அரசுக்கு எந்த ஒரு முகாந்திரம் கிடையாது. எந்தவிதமான மொழி திணிப்பும் இங்கு இல்லை. மும்மொழிக் கொள்கையில் மூலமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்தி பயில்வதை ஆளும் திமுக அரசு தடுத்து வருவது சட்டவிரோதம் நியாயமே கிடையாது என குற்றம் சாட்டினார். இந்தி எதிர்ப்பை வைத்து ஒரு காலத்தில் திமுக அரசியல் செய்திருக்கலாம். 21ம் நூற்றாண்டில் ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காலத்தில் பல்வகை மொழிகளை கற்றுக்கொண்டால் வளரும் இளம் தலைமுறைக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திமுக மொழிக் கொள்கையில் மறுபடி சீலனை செய்ய வேண்டும். மொழி விவகாரம் தொடர்பாக யாராவது நீதிமன்றம் சென்றால் திமுக ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பு கூட உருவாகலாம். நேற்று பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்கள் அழித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திமுக அரசை கலைக்கக்கூடிய சூழல் கூட உருவாக்கலாம். இரு மொழி கொள்கை விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் மொழி கொள்கையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குழந்தைகளின் கல்வியில் திமுக விளையாட கூடாது. மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்குவதற்கு திமுக அதிமுகவின் தவறான மொழிக் கொள்கையை காரணம். மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்பான கேள்விக்கு தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியில் வெற்றி பெற்ற எம்பிக்கள் போராடி தமிழகத்திற்கு வேண்டிய நிதியை பெற்று தர வேண்டியதுதானே. மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை என்றால் தமிழகத்திற்கான நிதி வழங்க படாத என தெரிவித்த தமிழக அரசு அதனை செயல்படுத்த வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை மட்டுமே தற்போது திமுக வகுப்பு பாஜகவுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மித மிஞ்சிய அளவிற்கு கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. வேளாண் விளைநிலங்கள் கனிம வள கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு வருமானத்தைப் பெருக்கி வருகின்றனர். பொதுமக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. சிவகாசியில் அடிக்கடி தொடர் பட்டாசு வெடி விபத்துகளால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கான தீர்வு காணப்படாமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இருந்து வருகிறது. ஜவுளி பூங்கா வருவதாக அறிவிப்பு வெளியானது தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. கனிமவளக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்தால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கட்சி குறித்தான கேள்விக்கு இப்போதைக்கு இதைப்பற்றி பேச வேண்டாம் என தவிர்த்தார். பேட்டி: கிருஷ்ணசாமி - நிறுவனர் (புதிய தமிழகம் கட்சி
Next Story

