பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது

பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
X
பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என மொத்தம் 7 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.15.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 இலட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வதுவார்பட்டியை சேர்ந்த திருமதி ராமலட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கோணப்பசாமி என்பவருக்கும், சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த திரு.சைமன் டேனியல் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சங்கரேஸ்வரி என்பவருக்கும், சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி வீரலெட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.ரவிச்சந்;திரன் என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி கஸ்தூரி என்பவருக்கு ரூ.2 இலட்சம் மற்றும் விருதுநகர் கோட்டையூரை சேர்ந்த திருமதி முருகேஸ்வரி, விருதுநகர் வட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த திரு.மாணிக்கம் மற்றும் அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி மகாலட்சுமி ஆகியோர்களுக்கு தலா ரூ.50,000- வீதம் என மொத்தம் காயமடைந்த 4 நபர்களுக்கு ரூ.3.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என ஆக மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
Next Story