தேனி மாவட்டம் கம்பத்தில் திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
தமிழர் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை கேஷ்டாக் செய்துள்ளதை கண்டிக்கும் விதமாக திராவிடம் முன்னேற்ற கழக கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கும் விதமாக கெட் அவுட் மோடி, கெட் அவுட் பிஜேபி என்ற போஸ்டர்கள் கம்பம் நகர் முழுவதும் அனைத்து சுவர்களிலும் திராவிட முன்னேற்றக் கழக நகர் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் கம்பம் பகுதியில் பிஜேபி யிரிடம் சலசலப்பையும், திமுகவினர் மேலும் இது போன்ற அதிகப்படியான போஸ்டர்கள் ஒட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளதால் கம்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
Next Story




