தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்ட  பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள்  மஞ்சுளா, அருணா தேவி, முருகானந்தம், தவச்செல்வன், ரவிச்சந்திரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவருமாகிய  மாரியப்பன், இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சோமு, மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வி  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.   மாவட்டச் செயலாளர் முருகன், கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், செயல்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பறிக்கையினை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ராஜசேகர் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். 'சுயசார்புக்கான அறிவியலும், தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்கக் கூடிய ஜனநாயக பூர்வமான வளர்ச்சி' என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்  ஸ்டீபன்நாதன்  கருத்துரையாற்றினார் மாவட்டப் பொதுக்குழுவில்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மாலதி, ரெஜினா மேரி, தங்கமணி, காளீஸ்வரி, மாதையன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.  வெள்ளக் காலங்களில் நீரை சேமிக்க புதிய நீர் வழித் தடங்களை ஏற்படுத்தி, நீரை மேலேற்றம் செய்து ஏரி குளங்களில் சேமிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும். மண்ணில் கொட்டப்படும் களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் போன்றவை உணவை  நஞ்சு ஆக்குவதோடு, உயிரி பல்வகையினையும், உயிரின சங்கிலியையும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடை செய்து அரசாணை பிறப்பித்து, நீரின் தூய்மை உறுதி செய்யப்பட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டச் செயற்குழு மோகன், தமிழமுதன், செந்தாமரை, மாத்தூர் ரஞ்சிதா, பாலச்சந்தர், துனிஷ்யா உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும்,  ஹேமலதா, பள்ளத்தூர் ரஞ்சிதா, நீலுஜா,  பிரியதர்ஷினி, பிரியங்கா, துர்கா, ராஜலட்சுமி, காயத்ரி உள்ளிட்ட  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆரோக்கியம் உபகுழு ஒருங்கிணைப்பாளர்  கண்ணன் உள்ளிட்ட  80க்கும் மேற்பட்ட தஞ்சை மாவட்ட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார்  நன்றி கூறினார்.  முன்னதாக அண்மையில் காலமான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் குரு.கார்த்திகேயன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுக்குழு கூட்டத்திற்குப் பின், பிற்பகல் மாவட்டச் சிறப்பு செயற்குழுகூட்டம் நடைபெற்றது.
Next Story