படத்திறப்பு நிகழ்ச்சி

X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமியின் மூத்த மகனும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளருமான அண்மையில் மறைந்த பட்டதாரி ஆசிரியர் குரு. கார்த்திகேயன் படத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என். சீனிவாசன் படத்தை திறந்து வைத்தார். சிபிஎம் மூத்த தலைவர் கோ.நீலமேகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, மாநகரக்குழு, இடைக்கமிட்டி நிர்வாகிகள், ஆசிரியர் அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Next Story

