திருவள்ளூர் அருகே அரசு மண்குவாரி செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு

மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் அதுவரை மண் குவாரி செயல்பட விட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிப்பு
மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் அதுவரை மண் குவாரி செயல்பட விட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் உங்கள் தலைவர் தொல் திருமாவளவனிடம் நாங்களே பேசுவோம் எனக்கூறி காவல்துறையினர் சமரசம் மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடி புத்தூர் கிராமத்தில் கிருஷ்ணா நதிநீர் செல்லும் கால்வாய் ஒட்டிய பகுதியில் அரசு மண் குவாரி மூன்று மாதத்திற்கு சாலை அமைக்கும் பணிகளுக்காக மண் எடுப்பதற்காக அனுமதி பெற்று அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் அதற்கான அனுமதியை கொடுத்துள்ளனர் தங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அந்த இடத்தில் தேர்வு செய்து வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்த நிலையில் அங்கு மண்குவாரி செயல் பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மண் எடுக்க வந்த மண் அள்ளும் இயந்திரத்தை உள்ளே செல்ல விடாமல் அப்பகுதியில் திரண்டு வந்த அவர்கள் மண் எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர் மேலும் இது குறித்து ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர் அப்போது விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் எங்கள் மாவட்ட செயலாளர் வருகிறார் வரும் வரை இங்கேயே இருப்போம் என கூறியதை தொடர்ந்து சமரசம் மேற்கொண்ட டிஎஸ்பி உங்கள் தலைவர் திருமாவளவன் அவர்களிடம் நானே பேசுவேன் அண்ணனின் பெயரை சொல்லுங்கள் அவரும் பேசுவார் என தெரிவித்தவுடன் மண்குவாரி ஆட்சியர் அறிவிப்பு வரும் வரை செயல்படாது என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதிய காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக அரசு பேருந்து மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டு பின்னர் சமரசம் செய்து பொதுமக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் .
Next Story