திருப்பத்தூர் அருகே முதல்வர் மருந்தகம் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே முதல்வர் மருந்தகம் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு பொது மருத்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் காக்கங்கரை பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்திரவல்லி, மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அதல்லதம்பி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதியாளர் பாலகிருஷ்ணன், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
Next Story

