ஆரணி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா.

X
ஆரணி நகரம் மற்றும் ஒன்றியங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அவரது உருவப்படத்திற்கு திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல் ஜெயசுதா மலர் தூவி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் ஆரணி நகரம் அண்ணாசிலை அருகிலிருந்து அதிமுகவினர் மாவட்ட அவைத் தலைவர் அ.கோவிந்தராஜன் தலைமையில்ஊர்வலமாக சென்று ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கின்ர. இந்நிகழ்வுகளில் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் க.சங்கர், ஜெயபிரகாசம், திருமால், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு, மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஏ.ஜி.ஆனந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. மோகன், குமரன், மாவட்ட இணைச் செயலாளர் வனிதாசதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உசேன்ஷெரீப், கலை பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. படச்செய்தி. ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் அன்னாதானம் வழங்கினார் மத்திய மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா. உடன் தெற்குஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

