உடுமலை அருகே மலைப்பாம்பு மீட்பு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் கிராமம் செல்வபுரம் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் அமராவதி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாபமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Next Story

