ராமநாதபுரம் சாயல்குடி அருகே குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டியில் உள்ள ஶ்ரீ திண்டு முண்டார் முனீஸ்வரர் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 35 ஜோடி மாட்டு வண்டிகளும், சின்ன குதிரை வண்டி போட்டியில் 7 வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டு வண்டி பந்தயத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. குதிரை வண்டி பந்தயத்திற்கு கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்தி சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது இதில் முதல் 4 இடங்களை பிடித்த குதிரை, மற்றும் மாடுகளுக்கும் ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த குதிரை மற்றும் மாட்டு வண்டி போட்டியை காண சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
Next Story



