ராமநாதபுரம் ஸ்ரீநாகாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கமுதி அடுத்துள்ள காவடிபட்டி ஸ்ரீ நாகாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா சனிக்கிழமை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள காவடிபட்டி ஸ்ரீ நாகாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா சனிக்கிழமை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து காலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சோம பூஜை, சூரிய பூஜை, கோமாதா பூஜை, கன்னிகா பூஜை, பூர்ணா குதி தீபாதாரணை நடைபெற்றது. பின்னர் மங்கல இசை வாத்தியங்களுடன் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு, ஆலயம் சுற்றி வந்து ராஜகோபுரத்தில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் மற்றும் விநாயகர், முருகன், துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் காவடிபட்டி, ராமசாமி பட்டி, நீராவி, கிளாமரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காவடிபட்டி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.
Next Story