ராமநாதபுரம் இக்பால் துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

X
ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக இரண்டாம் இடம் பிடித்த கமுதி இக்பால் துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் தாளாளரும், கமுதி பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சஹாராணி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ரா.சண்முகநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியை சுமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்திரிக்கையாளர் மு.சர்க்கரைமுனியசாமி, வல்லந்தை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அபூபக்கர் ஆகியோர் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புதிய மாணவர்களுக்கும் சுந்தரபுரம் பொதுநல அறக்கட்டளையினர் சார்பில் இலவச பள்ளி சீருடை, விளையாட்டு சீருடைகளும், பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் கல்வி உபகரணங்கள் மற்றும் தொழிலதிபர் சித்திக் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதிதாக மாணவர்களை சேர்த்த பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாக குழு சார்பில் கெüரவிக்கப்பட்டது. இக்பால் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் முகமதுபெரோஸ் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை பாத்திமா நன்றி கூறினார். இதில் சுந்தரபுரம் பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள், சுந்தரபுரம் ஜமாத் நிர்வாகிகள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

