காவேரிப்பாக்கம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
X
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓச்சேரி அருகேயுள்ள பழஜூஸ் கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 24) மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விற்பனைக்காக அவர் வைத்திருந்த 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story