வாலாஜாப்பேட்டை அருகே செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் சாவு

X
வாலாஜாப்பேட்டை அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). விவசாயியான இவர் சொந்த மாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். வாலாஜாப்பேட்டை அடுத்த அனந்தலை மலைப்பகுதியில் செம் மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென 13 ஆடுகள் ஒவ்வொன்றாக மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் ஆடு கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

