சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்

X
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டியில் இயங்கி வரும் மோட்டார்களில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

