சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்
X
ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 4 ரோட்டில் இருந்து அமைப்பு செயலாளர் சிங்காரம் தலைமையில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் எம்.கே.செல்வராஜ் ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் முன்னிலையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக அண்ணா பூங்கா மணிமண்டபம் வரை வந்தனர். பின்னர் அங்கு கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து மணிமண்டபத்தில் இருந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு 77 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பும் வழங்கினர்.
Next Story