அரியலூர் மாவட்டத்தில் கலை பண்பாடு மையம் அமைக்கக் கோரிக்கை

X
அரியலூர், பிப். 24:- அரியலூர் மாவட்டத்தில் கலை பண்பாடு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகாவிடம், டி.டி.சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், அரியலூர் மாவட்டத்தில் கலை பண்பாடு மையம், அரசு இசைப் பள்ளி மற்றும் ஜெயங்கொண்டத்தில் நாடகத் தந்தை டி.டி.சங்கரதாஸ் சுவாமிக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர்களுக்கான உறுப்பினர் அட்டை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சுற்றுலாத்துறையினர் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் மேடை, நாடக கலைஞர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்ய சலுகை கட்டண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. :
Next Story

