வரி விதிப்பை குறைக்க மனு

X
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடத்திற்கான சொத்து வரியை ஈரோடு மாநகராட்சி அதிகரித்து உள்ளதாக ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஈரோடு கரெக்டா அலுவலகத்தில் ஈரோடு மாநகராட்சி அதிகரித்து உள்ள சொத்து வரியை குறைக்க வலியுறுத்தி சொத்து பத்திரங்கள் மற்றும் தங்கள் கட்டிடத்திற்கான சாவியை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 15 தினங்களில் ஈரோடு மாநகராட்சி உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சொத்து வரியை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரி செலுத்துவோர் சங்கத்தினர் ஈரோடு மாநகராட்சி வருடம்தோறும் 6 சதவீதம் வரி உயர்வை கைவிட வேண்டும்,சொத்து வரி செலுத்த காலதாமதத்திற்கு மாதந்தோறும் 12 சதவீதம் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், 24 மணி நேரங்கள் 7 நாள் கெடு. ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும், வரி உயர்வு,புது வரி விதிக்கும் போதும் பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்டு கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் திருச்சி கோவை மாநகராட்சி விட அதிக வரி வசூல் செய்வதை கைவிடும் வகையில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு வரி விதிக்கப்படாமல் கட்டிடங்களுக்கு வரி விதித்து ஈரோடு மாநகராட்சியின் வருவாயை பெருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
Next Story

