தி.மு.க.வினர் வைத்த பேனர் அகற்றிய அரசு அலுவலர்

X
Komarapalayam King 24x7 |25 Feb 2025 10:01 AM ISTகுமாரபாளையம் தி.மு.க.வினர் வைத்த பேனரை அரசு அலுவலர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் வளாகத்தில் பல அரசியல் கட்சியினர், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் சார்பில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ராமக்கா மெஸ் எனும் பெயரில் தி.மு.க. நிர்வாகி சிவக்குமார் வரவேற்பு பனீர் வைத்திருந்தார். அந்த பேனரை கோவில் செயல் அலுவலர் அகற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து, தி.மு.க. நிர்வாகி சிவக்குமார் கூறியதாவது: காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தார், கல்வி நிறுவனங்கள் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எனது மெஸ் சார்பில் வரவேற்பு பேனர் வைத்திருந்தேன். அதனை கோவில் செயல் அலுவலர் குணசேகரன் அகற்றியதுடன், கிழித்து சேதப்படுத்தியும் உள்ளார். அங்கு வைக்கப்பட்ட வேறு எந்த பேனரையும் அகற்றவில்லை. அத்துமீறி செயல்படும் இந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
