அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

X
Komarapalayam King 24x7 |25 Feb 2025 10:03 AM ISTஅ.தி.மு.க.வில் சேருகிறேன் என்று கூறியே பதவி வாங்கியவர்கள் அமைச்சரை பற்றி பேச தகுதி இல்லை முன்னாள் அமைச்சர் மகன் காட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்விழா நடந்தது. இதில் அ.தி.மு.க.வில் சேருகிறேன் என்று கூறியே பதவி வாங்கியவர்கள் அமைச்சரை பற்றி பேச தகுதி இல்லை என முன்னாள் அமைச்சர் மகன் காட்டமாக பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்விழா குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் பங்கேற்று ஜெயலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தரணிதரன் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் தங்கமணியை பற்றி இங்கு ஒருவர் பேசியதை அறிந்தேன். குமாரபாளையம் நகருக்கு எந்த ஒரு வேலையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். அவர் என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். நீ எங்கு இருந்தாய்? பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார். பல்லக்காபாளையம் பகுதியில் அதற்காக இடம் வாங்கப்பட்டு பூமி பூஜை போட இருக்கும் போது, தி.மு.க.வினர், அப்பகுதி மக்களை தூண்டிவிட்டு, பூஜை போட முடியாமல் செய்தனர். அதற்குள் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கபட்டது. அதனால் அதனை தொடர முடியவில்லை. எங்கள் அமைச்சர் வசம் வந்து, அ.தி.மு.க.வில் சேருகிறேன் எட்ன்று கூறி விட்டு, இதனை பயன்படுத்தி அவரது கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டார். வட நாட்டுக்கு போய் குதிரை வாங்க தான் லாயக்கு. எங்கள் அமைச்சரை பற்றி பேச எவ்வித தகுதியும் உங்களுக்கு கிடையாது. எங்கள் அமைச்சரால்தான் உனக்கு பதவி வந்தது. இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
