புத்தகத் திருவிழாவில் மாணவிகளின் பரதநாட்டியம்

புத்தகத் திருவிழாவில் மாணவிகளின் பரதநாட்டியம்
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் எஸ்எல்வி மைதானத்தில் மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவருக்கான போட்டிகள் நடைபெற்றன.        மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி அங்கு வந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.        நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் செந்தூர் ராஜன் வரவேற்று பேசினார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஸ்ரீலஜான் தலைமை வகித்து பேசினார். கூட்டுறவு சங்கங்களை இணைப்பதிவாளர் சிவகாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,  நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story