மீஞ்சூர் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுத்தம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றச்சாட்டு
மீஞ்சூர் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி சுமார் 18 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பேரூராட்சியாகும். குறிப்பாக இந்த பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிக்காக பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் பல இடங்களில் கால்வாய்கள் தூர்வரப்படாமல் குறிப்பாக மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இருக்கும் கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கொசுக்களை உற்பத்தி செய்யும் ஒரு இடமாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒப்பந்த தொழிலாளி சதீஷ் ஒரு பகுதியில் உள்ள கால்வாயை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அந்த கால்வாயில் இருக்கும் அசுத்தங்களையும் குப்பைகளையும் அகற்றுவதற்கு அவரிடத்தில் உபகரணம் ஒன்றுமில்லை ஒரு கொம்பை வைத்து குப்பைகளை அகற்றுவதை அந்த பகுதியில் இருக்கும் ஒரு நபர் படம் பிடித்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அது பரவி வருகிறது. சதீஷ் ஒரு ஒப்பந்த தொழிலாளி கடந்த ஆறு வருடங்களாக மீஞ்சூர் பேரூராட்சியில் இவர் துப்புரவு பணியாளராக வேலை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து இங்குள்ள நிரந்தர தொழிலாளர்கள் கேட்ட பொழுது உண்மைதான் ஒப்பந்த பணியாளர்களுக்கு அந்த ஒப்பந்த தொழிலை எடுக்கும் நபர் உபகரணங்கள் அளிக்க வேண்டும் குறிப்பாக மாஸ் கையுறை ஆகியவை அளிக்க வேண்டும் ஆனால் இவைகள் எவையும் இந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. மேலும் மீஞ்சூர் பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் இந்த ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு சரியான உபகரணங்கள் அளிக்கப்படாததால். மீஞ்சூர் பேரூராட்சிக்கு எதிரே உள்ள கால்வாய் கூட பல மாதங்களாக மோசமான நிலையில் தூர்வாரப்படாமல் இருக்கிறது இந்த பகுதியில் தான் அரசு மருத்துவமனை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் பேரூராட்சியில் அலுவலகம் அருகில் தான் மருத்துவமனை இருக்கிறது ஆனாலும் கூட பேரூராட்சி நிர்வாகம் இதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை குறிப்பாக வார்டு உறுப்பினர்கள் சிலர் வளர்ச்சிப் பணிகளை எடுத்து அதன் மூலம் பலன் அடைவதற்காக முயற்சி செய்கின்றனர். ஆனால் அடிப்படை வேலைகளை செய்வது இல்லை குறிப்பாக பேரூராட்சி அமைந்துள்ள பகுதியே குப்பையும் அசுத்தமும் நிறைந்த கால்வாய்கள் இருப்பது இதற்கு மிக சிறந்த உதாரணம்.
Next Story