கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்.
கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம். - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திடும் வகையில் பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் சார்பாக பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 20 சதவிகித ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கிட வேண்டியும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153 படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரியும். 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நடைபெற்றது. இந்நிகழ்வினை பெரம்பலூர் மாவட்ட தலைவர் பழனிவேல்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண்குமார் , மாவட்ட துணை தலைவர் தாமஸ் விக்டர் . மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன் , உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story





