தெற்கு பொய்கை நல்லூர் செல்லியம்மன் ஆலயத்தில் முளைப்பாரி திருவிழா

500-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மியடித்து குலவையிட்டு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில், பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சண்டி ஹோமம் உற்சவத்தை முன்னிட்டு, முக்கிய நிகழச்சியான முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட விரதமிருந்த பெண்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை, தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேளதாளத்துடன் புனிதநீர் ஊர்வலமாக முன்னே செல்ல, பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர், பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு, வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story