கருங்கல் : திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கருங்கலில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில்:- தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவற்றில் உதவி செய்தும், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஒரு மாத காலம் இந்த விழா கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிதி வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதை பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்லும் வகையில் ஒவ்வொரு குக்கிராமம் வாரியாக தெருமுனை பிரச்சார கூட்டங்களையும் வாகனப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

