விபத்தில் இறந்த மாணவிகள் குடும்பத்தினருக்கு நல உதவி

விபத்தில் இறந்த மாணவிகள்  குடும்பத்தினருக்கு நல உதவி
X
கலெக்டர் வழங்கினார்
நாகர்கோவிலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.      இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-  பாரத ஸ்டேட் வங்கியின் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக 9 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளா மாநிலம் மூணார் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த மாணவரின் பெற்றோரிடம் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. என  தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார், பிரின்ஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story