ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு மின்விளக்குகள் பழுது நீக்கிய கவுன்சிலருக்கு பாராட்டு

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு மின்விளக்குகள் பழுது நீக்கிய கவுன்சிலருக்கு பாராட்டு
X
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு மின்விளக்குகளை பழுது நீக்க கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அரியலூர் பிப்.25- ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரவு நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காக பொதுமக்கள் நலன் கருதி 1வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் தனது சொந்த செலவில் மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்தார். அந்த மின்விளக்குகளால் விளையாட்டு மைதானம் பகல் போல் ஜொலித்தது பலரும் தங்கபாண்டியனை பாராட்டினர். இந்நிலையில் தற்பொழுது அந்த மின்விளக்குகள் பழுதாகி விளையாட்டு மைதானம் இருளில் மூழ்கியது. இந்நிலையில் இதுகுறித்து 1-வது வார்டை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் தங்கபாண்டியனிடம் முறையிடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தங்கபாண்டியன் விளையாட்டு மைதானத்திற்கு சென்று பழுதான மின்விளக்குகளை பணியாட்களை கொண்டு அப்புறப்படுத்தி புதிய மின்விளக்குகளை பொருத்தியும், மற்ற மின் விளக்குகளை பழுது நீக்கியும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்போது அனைத்து மின்விளக்குகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக மாலை நேரம் மற்றும் விடியற்காலை நேரங்களில் தைரியமாக உடற்பயிற்சி முடிவதாகவும், குறைகளை சொன்னவுடன் சரி செய்து கொடுத்த 1-வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியனுக்கு நன்றி தெரிவித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story