தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
X
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர், பிப்.25- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், பொதுப் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.7,850 வழங்கிட வேண்டும்.மருத்துவக் காப்பீடு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறைபடுத்தும் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ப.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மூ.மகாலிங்கம் கோரிக்கையுரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தொடக்கவுரையாற்றினார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் சங்க நிறுவனத் தலைவர் அ.நல்லப்பன், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story