பேட்டையில் உயிருக்கு போராடிய குதிரை
நெல்லை மாநகர பேட்டை எம்என்பி கீழத்தெரு பகுதியில் இன்று (பிப்ரவரி 25) குதிரை ஒன்று காலில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் படுத்தவாறு உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் அறிந்த முகநூல் நண்பர்கள் குழுவினர் குதிரையை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குதிரை உயிருக்கு போராடியதை பார்த்த அப்பகுதியினர் சோகத்துடன் சென்றனர்.
Next Story



