மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில், பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் சன்.சம்பத்,ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் வீரசெங்கோலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், ராகவி, கிருஷ்ணா, தெரணி.இளையராஜா, தமிழ்வேந்தன் மற்றும் கல்லூரி பெருமன்றம் சார்பில் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி, செட் அப் மோடி உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story