தா.பழூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் எம்எல்ஏ வழங்கினார்.

தா.பழூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் எம்எல்ஏ வழங்கினார்.
X
தா.பழூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
அரியலூர், பிப்.25- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில்,அரசு பொதுத்தேர்வு எழுதும், 10,11,12 ஆம் வகுப்பில் பயிலும்,8,060 மாணவ,மாணவிகளுக்கு எழுது பொருட்களை,தனது சொந்த நிதியில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளி, ஆகிய பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அசோகன் (பொ)(தா.பழூர்), R.எழிலரசி(ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி),தவிக்குமார் (அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டம்) மற்றும் இருபால் ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள்,கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
Next Story