வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.

X
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றக்கூடிய ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிரபு இவர் அங்குள்ள கிருஷ்ணாபுரத்தில் தங்கி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் தேர்வின் போது ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய 6 மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் உதவி மையம் என் 1098 புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

