போர்வெல் லாரி மோதி ஸ்கூட்டியில் சென்ற தமிழாசிரியை பலி

போர்வெல் லாரி மோதி ஸ்கூட்டியில் சென்ற தமிழாசிரியை பலி
X
விபத்து
தஞ்சாவூர் அருகே போர்வெல் லாரி மோதிய விபத்தில், ஸ்கூட்டியில் சென்ற தமிழ் ஆசிரியை செவ்வாய்க்கிழமை பலியானார்.   தஞ்சாவூர் அருகே விளார், ஜே.ஜி., நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்த குமார்,. தஞ்சை மாவட்ட தமிழாசிரியர் கழகச் செயலாளர். இவரது மனைவி  அமிர்த சங்கீதா (48), இவர் சில்லத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அமிர்த சங்கீதா ஸ்கூட்டியில் தினமும், வேலைக்கு சில்லத்தூர் சென்று வருவது வழக்கம்.  அதே போல் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் வேலைக்கு சென்றார். அப்போது, விளார் சாலையில், கொல்லாங்கரை கிராமம் அருகே சென்ற போது, பின்னால் வேகமாக வந்த போர்வெல் லாரி, அமிர்த சங்கீதா ஒட்டி சென்ற ஸ்கூட்டி மீது மோதியது.  இதில், தூக்கி வீசப்பட்ட அமிர்த சங்கீதா படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அப்பகுதியிலேயே லாரியை நிறுத்தி விட்டு, தப்பியோடினார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், காயமடைந்த அமிர்த சங்கீதாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அமிர்த சங்கீதா இறந்தார். இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   குறுகலான சாலை  "விளார் சாலை குறுகலாக இருப்பதால், இந்த சாலையில் வாகனங்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலை உள்ளது. மேலும், அப்பகுதியில் மண் கிராவல் குவாரி, கிரஷருக்கு அதிகளவில், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. குறுகிய சாலையை அகலப்படுத்த வேணடும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும்" என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story