இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

X
ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பை பகுதியை சேர்ந்தவர் காமன் (76). இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பிச்சைமணி என்பவர் ஓட்டி வந்த பைக் காமன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காமன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.24) உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் பிச்சைமணி மீது வழக்கு பதிவு.
Next Story

