தேனி அருகே வழிப்பறியில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

X
தேனி முத்துதேவன்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியரான ராமகிருஷ்ணன் என்பவரிடம் கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டு ரூ.7.50 லட்சத்தை பறித்து சென்றது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆண்டவர், சுரேந்திரன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று (பிப்.24) வழக்கில் தொடர்புடைய நாகராஜை கைது செய்து 2.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story

