கம்பம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை

கம்பம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை
X
தற்கொலை
கம்பம் அருகே நாராயணதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (41). இவருக்கு கடந்த ஆறு மாத காலமாக தீராத வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த சரஸ்வதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story