ஈத்தாமொழி அருகே பெண்ணை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

ஈத்தாமொழி அருகே பெண்ணை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
X
நாகர்கோவில்
நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி சத்யா (33). கடந்த சில நாட்களுக்கு முன் சத்தியா அதே பகுதி சித்ரேஸ் (41) என்பவரின் ஆட்டோவில் சவாரிக்கு சென்றார். அப்போது ஆட்டோ  சவாரி கட்டணம் கொடுப்பதில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதை காரணமாக வைத்து சத்யாவை பார்க்கும் போதெல்லாம் சித் ரேஸ்  ஆபாசமாக பேசி திட்டுவதாக கூறப்படுகிறது.         நேற்று சத்யா ஈயன்விளை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த சித் ரேஸ்  வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி கையால் கன்னத்தில் அடித்து கல்லை காட்டி சத்யாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.      இது குறித்து சத்யா ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சித்ரேசை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Next Story