காவல்துறை}பொதுமக்கள் நல்லுறவு மாராத்தான் ஓட்டம்

காவல்துறை}பொதுமக்கள் நல்லுறவு மாராத்தான் ஓட்டம்
X
காவல்துறை}பொதுமக்கள் நல்லுறவு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அரியலூர், பிப்.25- அரியலூரில் காவல்துறை}பொதுமக்கள் நல்லுவறுவை மேம்படுத்தும் வகையில் மாராத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், மாராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.15,17, 25 மற்றும் 25 வயதுக்கு ஆகிய வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, பிரதான சாலை வழியாக டால்மியா சிமென்ட் ஆலை வரை ஓட்டினர். முடிவில் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட 2 மாற்றுத்திறனாளிகளில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செலவனுக்கு நான்காம் பரிசும், அரியலூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் ஊக்க பரிசும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அரியலூர் ரகுபதி, அருள்முருகன்(மாவட்ட ஆயுதப்படை), மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: அரியலூரில் காவல்துறை}பொதுமக்கள் நல்லுறவு மாராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச்.
Next Story