வெளிநாட்டு போதை பொருளுடன் லாரி டிரைவர் கைது

வெளிநாட்டு போதை பொருளுடன் லாரி டிரைவர் கைது
X
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.         இந்த நிலையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று கோட்டார் எஸ்ஐ மகேந்து தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி  பின்னர்  போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் எருமேலியை  சேர்ந்த ஆனந்தகுமார் (30 ) என்பவரிடம் விசாரித்தனர்.       அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்து லாரியை  சோதனை செய்தபோது அவர் வெளிநாட்டு போதை பொருளான மெத்த பெட்டமைன் போன்ற போதை பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருள் லேசாக நுகர்ந்தாலே மணிக்கணக்கில் போதை தரும் பொருளாகும்.  இந்தியாவில் இதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.       இது தொடர்பாக ஆனந்தகுமாரிடம்  விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. எம் டி எம் ஏ என அழைக்கப்படுகின்ற போதை பொருளை பெங்களூரில் இனம் தெரியாத நபரிடம் வாங்கியதாக ஆனந்தகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story