பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்.

X
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், சரண்விடுப்பு ஒப்படைப்பு,உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகரில் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகணேசன், கருப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story

