மின்வாரிய பணியாளர்களின் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்.
திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய உயர்வு வேலைப்பளு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தின் 50க்கும் மேற்பட்டோர் இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
Next Story



