ராமநாதபுரம் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன் அலுவலகம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும், பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கி வைக்கப்பட்ட சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story