குமரியில் சிவாலய சிறப்பு தரிசன பஸ் இயக்கம்

X
குமரி மாவட்டத்தில் இன்று சிவராத்திரி முன்னிட்டு 12 சிவன் கோவில்களை ஒடி தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி - கேரளா பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். நேற்று முதலே இந்த நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவாலய ஓட்டத்தின் 12 சிவாலயத் திருக்கோவில் வழிபாட்டிற்காக 26.2.25 இன்று காலை 7.30 மணிக்கு வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் 12 சிவாலயங்களை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இப்பேருந்துகள் தரிசனம் முடிந்து வடசேரி பேருந்து நிலையத்திற்கு இரவு 9.00 வந்து சேரும். இதற்கான பயணக்கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 350 ஆகும். இந்த பஸ்கள் இன்று காலை முதல் இயங்க தொடங்கியது.
Next Story

