சோளிங்கர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

X
சோளிங்கர் ஒன்றியம் ஜம்புகுளம் தனியார் கல்லூரி கூட்டுச் சாலையில் இருந்து கேசவனாங்குப்பம், தளவாய் பட்டறை பகுதிகளுக்கு செல்லும் சாலை 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த வர்கள் சோளிங்கர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும். மாணவ, மாணவிகளும் இதே சாலை வழியாகத்தான் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இந்த சாலையானது 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். அதன்பின் இதுவரை சீரமைக்கப்படவில்லை. விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களுக்கு டிராக்டர் வேன்களில் உரம், பூச்சி மருந்தை கொண்டு செல்லவும் அறுவடை செய்தவிைள பொருட்களை கொண்டு வரவும் பயன்படுத்து கின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் அவை குண்டும் குழியுமாக மாறிகற்கள் பெயர்ந்து பயன் படுத்த முடியாத நிலைக்கு சென்று வருகிறது.குண்டும் குழியுமான சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவ தோடு அதில் செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் முறையிட்டு வருகின்றனர். ஆனால் சாலையை சீரமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து நவீன முறையில் தார்சாலை அமைக்க வேண்டுமென பொது மக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story

