தபால் அலுவலகம் முன்பு மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

X
ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.வினோத் தலைமை தாங்கினார். தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி,ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கு நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே. குழுமம் சந்தோஷ் காந்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், நகர செயலாளர் பூங்காவனம், செயற்குழு உறுப்பினர் அசோகன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, குமார், அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

